Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

ஆளுக்கொரு நீதி என்ற மனு தருமம்தான் ம.க.இ.க-வின் அமைப்பு முறையா?

24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள் இரண்டாவது கடிதம் – ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் அமைப்பு செயல்பாடுகள்)

ன்னை மட்டும் தலைமை ஒதுக்கவில்லை என்று அணிகளையும் தனக்குச் சாதகமாக அணி சேர்த்து கொள்ள முயற்சி செய்கிறார், மருதையன். அதற்காக, அமைப்புக்குள் இருக்கும் தனது எதிரிகள் “சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர்.” என்கிறார்.

இது உண்மை இல்லை. பிளீனமே சதி செய்து நடத்தப்பட்டதுதான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. தோழர்கள் யார் கேட்டாலும் இந்த ஆதாரங்களைத் எங்களால் தர முடியும். தேவை என்றால் நேரிலும் விளக்கத் தயாராய் இருக்கிறோம்.

அடுத்து, தனது எதிரிகள் “… அவ்வாறு முடிவு எடுத்த பிரதிநிதிகள் அனைவருமே செட்-அப் செய்து கொண்டு வரப்பட்ட மோசடி பேர்வழிகள்” என்று தூற்றியதாகக் கூறுகிறார்.

இதில் பாதி உண்மை இருக்கிறது. அனைவரும் “செட்-அப்” என்பதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட சக்திகள் செட்-அப் ஆக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களிலும் கணிசமானவர்களுக்கு தாம் செட்-அப் செய்யப்பட்டவர்கள் என்பது அவர்களுக்கே புரியாது. அதாவது அவர்களுக்கு தெரியாமல் செட்டப் செய்திருந்தனர். அவ்வளவு கிரிமினல் தனமாக செய்திருந்தனர் என்பதை எங்களால் நிரூபித்துக் காட்ட முடியும். அதற்கு ஆதாரம் உள்ளது.

“நான் ம.க.இ.க வின் செயலராக இருக்கும் போதே என்னை மாநாட்டுப் பணிகள் அனைத்திலிருந்தும் ஒதுக்கி வைத்து எனக்குப் “பாடம்” புகட்டினார்கள்.” என்கிறார். இப்படி செய்வது அமைப்பு முறைப்படி தவறுதான். ஆனால் இவர் தலைமையில் இருக்கும் போது 1-மற்றும் 2- டன் சேர்ந்து கொண்டு அணிகளை இப்படித்தானே நடத்தினார். அதற்கு இவர் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்.

“அம்பேத்கரியம் + பெரியாரியம் + மார்க்சியம்” என்று அமைப்பின் கொள்கையை கள்ளத்தனமாக மாற்றுவதற்காகத்தான் “நீலநிற ஜீன்ஸ், கருப்பு சட்டை, தலையில் சிவப்பு துணி” என்று ம.க.இ.க கலைக்குழுவின் சீருடையை மருதையன் மாற்றிவிட்டார்” என்று தனக்கு எதிரான “தந்திரசாலிகள்” பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர் என்கிறார், மருதையன்.

சரி, கலைக்குழு சீருடையை மாற்றுவதற்கு என்னதான் காரணம்? சீருடையை யார் மாற்றச் சொன்னது?

ஏற்கனவே சிகப்பு வெள்ளைதான் கலைக் குழுவின் சீருடை. மருதையன் ம.க.இ.க செயலர். ம.க.இ.க கலைக்குழுவின் சீருடையை அவருக்குத் தெரியாமல் யார் மாற்றினார்கள்? இப்படி மாற்றுவது கொள்கையை மாற்றுவது ஆகாதா? கொள்கையை முடிவு செய்த பிறகுதான் சீருடையை மாற்ற வேண்டும் என்ற அமைப்புக் கோட்பாட்டு முறைக்கு விரோதமாக சீருடையை மாற்றியதற்கு யார் காரணம் என்பதை இந்த ம.க.இ.க செயலராகிய மருதையன்தானே கூற வேண்டும்? வேறு யார் கூற வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கிறார்?

சீருடையை மாற்றியது பற்றி இவர் கொடுக்கும் விளக்கம், “இது ஒரு மலிவான அவதூறு…” என்பதுதான். செய்ததையும் செய்து விட்டு இப்போது அதை மலிவான அவதூறு என்று கூறுகிறார் என்றால், அமைப்பையும் சக தோழர்களையும் பற்றி இவர் என்ன கருதுகிறார் என்பது நமக்குத் தெளிவாகப் புரிகின்றது. இவர் மிகவும் ஆணவமாகவும், திமிர்த்தனமாகவும் இருக்கிறார் என்று மட்டும் தெளிவாக புரிகின்றது.

“அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி”, “சதி நடக்கிறது”, “முக்கியத் தோழர்களை ஒதுக்கும் முயற்சி” என்பன போன்ற சொற்கள் என்னைக் குறிவைத்து ஓராண்டாகவே பேசப்பட்டு வருகின்றன.” என்கிறார்.

ஏற்கனவே சதி செய்து குறுக்கு வழியில் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

“இறுதியாக, சனவரி, 11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20- பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். “எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல்.” என்கிறார்.

இது அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிரானதுதான். இது போன்ற நடைமுறையை (சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்காமல் மற்றவர்களிடம் அதைக் கேட்பது) ஏற்க முடியாதுதான்.

ஆனால், இதற்கு முன்னர் தலைமையுடன் இவரும் சேர்ந்து கொண்டுதானே, இது போலத்தானே பலரையும் நடத்தினார். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இதற்கு இவர் என்ன பதில் கூறப் போகிறார்?

“சரி – தவறுக்கிடையே நடுநிலை வகிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்” பலர் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது ஏட்டில் மட்டுமே இருக்க முடியும். இது இப்பிரச்சனையில் நான் பட்டுத் தெரிந்து கொண்ட கசப்பான உண்மை.”

அப்படி என்றால் அமைப்பில் தற்போது அத்தகைய சாமர்த்தியசாலிகள் பலர் இருக்கிறார்கள் என்றாகிறது. அமைப்பில் தற்போது ஜனநாயகம் என்பது ஏட்டில்தான் இருக்கிறது என்பதை இவரே ஒத்துக் கொள்கிறார். எனவே, இவருக்கே, தலைமையில் இருந்த இவருக்கே, அதுவும் முதல் நிலையில் இருந்த இவருக்கே, ஜனநாயகம் ஏட்டளவில்தான் இருக்கிறது என்றால், இவர்கள் மற்றவர்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்திருப்பார்களா?

இதில் இரண்டு அம்சங்களை நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

முதலாவதாக, அமைப்பு சிலரின் உடைமை அல்ல என்கின்றார். இதன் பொருள், அமைப்பில் தலைமை தாங்கியவர்கள் அமைப்பை தங்களது உடைமையாகப் கையாண்டு வந்துள்ளனர் என்றாகிறது. அப்படியானால், எப்படியெல்லாம் உடைமையாக்கி வந்தார்கள் என்பதை ஆதாரபூர்வமாக அவர் நிறுவ வேண்டும். அப்படி இவர் செய்ய மறுப்பாரேயானால், தனக்குப் அதில் பங்கு தரவில்லை என்பதற்காகத்தான், இப்படி பேசுகிறார் என்ற முடிவுக்குத்தான் நாம் வர வேண்டியிருக்கும். அல்லது ஏதோ இவர் சிந்தனை பிறழ்ந்து உளறுகிறார் என்றுதான் அர்த்தம் ஆகிறது. இதில் எது உண்மை என்பதை அவர்தான் நமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

“தலைமை தனது அதிகாரத்தின் துணை கொண்டு, தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

அதாவது, தற்போது இருக்கும் இந்தத் தலைமை தனது அதிகாரத்தின் துணை கொண்டு தனது தவறுகளை மறைத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார்.

அப்படியானால், இந்தத் தலைமை மா.லெ.மா சிந்தனைக்கு எதிராக இருக்கிறது என்றாகிறது. இந்தத் தலைமை புரட்சிகர தலைமையாக இருக்க முடியாது, என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. அப்படி என்றால் இந்தத் தலைமை எப்படியெல்லாம் தனது அதிகாரத்தால்,தனது தவறுகளை மறைத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அணிகளுக்கு தெளிவுபடுத்தி, புரட்சிக்கு எதிரான அந்தத் தலைமையை அப்புறப்படுத்த இவர் ஏன் முன்வரவில்லை. அதற்கான சாயல் கூட இவரது விலகல் கடிதத்தில் தெரியவில்லையே, ஏன்?

அது ஏனென்றால், இது நாள் வரை அந்தத் தலைமையுடன், இவரும் சேர்ந்து கொண்டு, அதிகாரத்தின் துணை கொண்டு தங்களது தவறுகளை மறைத்துக் கொண்டு இருந்துள்ளார் என்பதுதானே உண்மை.

தற்போது அந்த நடைமுறை தன் மீது பிரயோகிக்கப்படும் போது மட்டும், அது இவருக்கு பாதகமாகத் தெரிகிறது. பாதகமாக உணர்கிறார் என்பதால் தானே தற்போது அதை வெளிப்படுத்துகிறார்.

இரண்டாவதாக,

இந்தத் தலைமையின் செயல்பாட்டினால் அதாவது, இந்தத் தலைமையால் அதிகாரத்தின் துணை கொண்டு, தங்கள் தவறுகளை மறைத்துக் கொண்டு இயங்கியதால் பலர் வெளியேறி உள்ளனர் அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர்; அப்போதெல்லாம் இவர் தலைமையின் தவறை ஏன் எதிர்த்து போராடவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லை, இல்லை அந்த வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் ஜனநாயகமாகத்தான் மா.லெ.மா அமைப்பு முறைப்படிதான் நடத்தப்பட்டனர் என்று இவர் கூறுகிறாரா?

அப்படி அவர்களை – அந்த வெளியேறியவர்களை, வெளியேற்றப்பட்டவர்களை- ஜனநாயகமாகவும், அமைப்புக் கோட்பாட்டின்படி நடத்திய தலைமை, இவர்களை (மருதையன், நாதன்) மட்டும் இப்படி அமைப்புக் கோட்பாட்டுக்கு விரோதமாக, அதாவது தங்கள் தவறுகளை மறைத்துக் கொண்டு நடத்துகிறதா?

அவ்வாறு மாறுபட்டு நடத்தியதற்கு என்ன அடிப்படை என்பதை, இவர் நமக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இவர்களை மட்டும் தவறாக நடத்தியதற்கு என்ன அடிப்படை என்பதை இவர் தெளிவுபடுத்த வேண்டும்.

மூன்றாவதாக : தனக்குத்தான் ஜனநாயகத்தைத் தரவில்லை. அணிகளுக்கு எல்லாம் ஜனநாயகத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் என்று கூறுகிறாரா? என்பதை இவர் தெளிவுபடுத்த வேண்டும். அணிகளுக்கு மட்டும் ஜனநாயகத்தைக் கொடுத்து விட்டு எனக்கு மட்டும் அதை கொடுக்கவில்லை என்றால், என்ன காரணத்தால் அப்படி செய்தார்கள் என்பதற்கான காரணத்தை அவர் இப்போது தெளிவுபடுத்த வேண்டும்.

நான்காவதாக :

இல்லை எனக்கு மட்டுமல்ல, அணிகளுக்கும் ஜனநாயகத்தைத் தரவில்லை என்று உண்மையிலேயே இவர் நினைக்கிறார் என்றால், இதுநாள் வரை தலைமையில் இவரும் இருந்தவர்தானே? இதை ஏன் இதுவரை இவர், அந்த ஜனநாயக மறுப்பை எதிர்த்துப் போராடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

“நான்கரை மாதங்களாக அமைப்புக் கட்டுப்பாடு கருதி நான் தோழர்கள் யாரிடமும் பேசவில்லை” என்கின்றனர், மருதையனும், நாதனும்.

அடேயப்பா!

“இந்தத் தலைமையால் வழிநடத்தி முடிவு செய்து நடைமுறைப்படுத்தபட்டு வந்த கட்டமைப்பு நெருக்கடி புதிய தாக்குதல் செயல் தந்திரம் என்பது எப்படித் தவறானது! கற்பனையானது! இந்த செயல்தந்திரத்தை செயல்தந்திரம் என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று விமர்சனக் கடிதங்களை தோழர் ஆம்பள்ளி முனிராஜ் தலைமைக்குக் கொடுத்தார். 16-12-2016ல் ஒன்று, ஜூலை 2017ல் ஒன்று என இரண்டு கடிதங்கள் கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை அது பற்றி இந்தத் தலைமை எந்தப் பதிலையும் தராமல் இருந்து வருகிறது. நடந்து முடிந்த பிளீனத்திலும் இதை வைக்கவில்லை. இருட்டடிப்பு செய்து விட்டது. இதில் தலைமையில் இருந்த இந்த மருதையனுக்கு ஏதும் பொறுப்பு இல்லையா?

இது இவருக்கு தெரியாமலேயே நடத்தப்பட்டதா? நான்கரை மாதங்களாக அமைப்புக் கட்டுப்பாடு கருதி யாரிடமும் பேசவில்லை என்று, தற்போது பெரிதாக பேசும் இவர், தலைமையில் இருந்து கொண்டு இது பற்றி மூன்றாண்டுகளாக இருட்டடிப்பு செய்தீர்களே இது பற்றி என்ன கூறுகிறீர்கள்!

தோழர் ஆம்பள்ளி முனிராஜ், தலைமையின் ஜனநாயக மறுப்பை எதிர்த்து தனது 13 கடிதங்களை அணிகளுக்கு விட்டு, விவாதித்து இறுதியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார், அதை தலைமை மறுத்து விட்டது. எனவே வேறு வழியில்லாமல் அவரின் கருத்துக்கள் அணிகளுக்குப் போய்ச் சேரும் விதத்தில் வலை தளத்தில் வெளியிடலாமா, வேண்டாமா வேறு என்ன செய்யலாம் என்று கோரிக்கை வைத்து அணிகளிடம் வாட்ஸ்-அப்-ல் கருத்து கேட்டதற்கு சீர்குலைவு வாதி என்றும், துரோகி என்றும் பட்டம் சூட்டிய மருதையனும், நாதனும் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இன்று கட்சியின் இணையதளத்திலேயே, தலைமை மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்களே! இதை என்னவென்று கூறுவது?

இதன் காரணமாக தன்னை பற்றி சீர்குலைவுவாதி என்று கூறினால் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வேன் என்கிறார். இந்த வார்த்தை எவ்வளவு ஆணவம், திமிர்த்தனம், பணிவு இன்மை, நிறைந்தது. இவரைப் போன்றவர்கள் அடங்கிய தலைமையின் கீழ் நாங்கள் எல்லாம் இருந்தோமே என்பதற்கு உண்மையிலேயே வெட்கித் தலைகுனிகிறோம். எவ்வாறு எல்லாம் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்று மிகவும் வேதனைப்படுகிறோம்.

“அமைப்பின் கவுரவத்தைக் குலைக்கிறேன்” என்று குற்றம் சாட்டுவார்கள். தங்கள் போலி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அமைப்பின் கவுரவத்தை சந்திக்கு கொண்டு வந்திருப்பவர்கள் அவர்கள்தான் என்பதே எனது பதில்”, என்கிறார்.

இதன் பொருள் என்ன?

இவர் தலைமையுடன் முரண்பட்ட இந்தக் கருத்தை, அமைப்பின் வினவு தளத்திலேயே, பொது வெளியில் வெளியிட்டது அமைப்பின் கவுரவத்தை குறைப்பது ஆகாது என்கிறார். அப்படி விடுவதுதான் சரி என்கிறார். இவர் கூறுவதின் படி பார்த்தால், அமைப்பின் செயல்பாடு பற்றி அமைப்பில் உள்ள யார் வேண்டுமானாலும், இப்படி வலைத்தளத்தில் விடலாம் என்கிறார். இப்படி விடுவதை சீர்குலைவு என்று கூறினால் அது நகைச்சுவையானது என்கிறார்.

மேலும் அதே பாராவில் “தாங்கள் போலி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமைப்பின் கவுரவத்தை சந்திக்குக் கொண்டு வந்திருப்பவர்கள்தான் என்பதே எனது பதில்” என்கிறார்.

இதில் இரண்டு விசயங்களை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று “தங்களின் போலி கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக…” என்கின்றார்.

அந்த போலி கவுரவம் என்ன? அதை காப்பாற்றிக் கொள்ள முனைபவர்கள் யார்? என்பதை குறிப்பாக தெளிவுபடுத்த வேண்டும். அப்படி இல்லாமல் பூடகமாகப் பேசுவது, பொதுவாகப் பேசுவது, மறைபொருளாகப் பேசுவது எல்லாம், அணிகளை ஏமாற்றுவது, குழப்புவது, மோசடியானது.

இரண்டாவது அமைப்பின் எந்த கவுரவத்தை யார் சந்திக்குக் கொண்டு வந்தார்கள் என்பதை இவர் தெளிவுபடுத்த வேண்டும்.

மருதையன் தான் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு அமைப்பின் இணையதளத்திலேயே தனது விலகல் கடிதத்தை வெளியிட்டு, அதில் பூடகமாக சொல்லியிருக்கும் விவகாரங்களின் மூலம் பல ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்டு வந்த அமைப்புக் கோட்பாட்டு விரோத விவகாரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார். இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகளின் கோட்பாட்*டு ஓட்டாண்டித்தனம்தான்.

இன்னும் தொடர்ந்து பேசுவோம்.

– ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு

5 replies on “ஆளுக்கொரு நீதி என்ற மனு தருமம்தான் ம.க.இ.க-வின் அமைப்பு முறையா?”

தோழர். உங்கள் பதிவுகளை பிடிஎப் வடிவில் தந்தால் பகிர்ந்து கொள்ளவும் படி எடுக்கவும் வினியோகவும் எளிதாக இருக்கும்

Like

உங்கள் ஆலோசனைக்கு நன்றி, தோழர். பதிவுகளை பி.டி.எப் வடிவில் தருவதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை விரைவில் செய்கிறோம்.

Like

Thanks Mathi.

It will be useful if you elaborate more on what you consider as criticism and what is aspersion, defamation etc. Anyway, we will take your views into account in future posts.

Like

/// இன்னும் தொடர்ந்து பேசுவோம். ///

Lockdown Holidays aa??

Y no updates ?

Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started